எனது முதல் முயற்சி...

>> Friday, January 1, 2010


வணக்கம் அன்பு நெஞ்சங்களே...

வாழ்வியல் மாணாக்கனின் வாழ்வியல் வலைப்பூவிற்கு வரவேற்கிறேன்...


வாழ்வில் நாம் பழகிய, நமக்கு பழகிய பல விஷயங்கள் இன்று நமது அன்றாட வாழ்வின் அங்கங்களாகி தொடர்கின்றன...

இளந்தளிராய் விழி மலர்ந்து, முதல்
ஒளி பூமியில் கண்டு அழுதது... முதல் அழுகை...

பூங்கொத்தாய் அன்னை மடி இருந்து, அவள் பூ முகம் கண்டு சிரித்தது... முதல் சிரிப்பு...

மழலை மலர்ப்பாதம், அடி மேல் அடி வைத்து, தடுமாறி பழகுவது... முதல் நடை...

மாணாக்கராய் பாடம் பயில, ஏடெடுத்து பள்ளி செல்வது... வாழ்வின் முதல் படி...

இப்படியாக வாழ்வின் பல பழகிய பகுதிகளினூடே... அவ்வரிசையில்...

வாழ்வியல்... இது எனது முதல் வலைப்பூ...

இந்த வலைப்பூ வாழ்வியலை விளங்க வைக்கும் பல ஆன்றோர், சான்றோரின் கருத்துகளை பூகோள எல்லைகளின்றி தொகுக்கும் பார்வையில்,
எனது முயற்சியில் உருப்பெற்றுகொண்டிருக்கிறது...

இந்த ஆண்டு (2010) ஆங்கில புத்தாண்டில் இது எனது முதல் வலைப்பூ முயற்சி... எனது முதல் முயற்சி என் எண்ணப்படி தமிழில் அமைவது குறித்து மகிழ்ச்சி...

அன்பு நெஞ்சங்களின் குட்டுகளும், ஷொட்டுகளும் வரவேற்கப்படுகின்றன...

என்றும் அன்புடன்...
வாழ்வியல் மாணாக்கன் - செந்தில்...


1 comments:

butterfly Surya January 3, 2011 at 11:28 AM  

வருக.. வருக..

உங்கள் பணி சிறக்கட்டும்.

வாழ்த்துக்கள்.

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP